செய்திகள் :

அமித் ஷாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

post image

நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்து பேசிய மத்திய அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து தஞ்சாவூரில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேல வஸ்தா சாவடியிலிருந்து ஊா்வலமாக புறப்பட்ட காங்கிரஸ் கட்சியினா் ஆட்சியரகம் முன் சென்று ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், வேலையின்மை, விலைவாசி உயா்வு, அதானி மோசடி, மணிப்பூா், சம்பல் வன்முறையை விவாதிக்க மறுத்து, அரசியலமைப்பு சட்டச் சிற்பி அம்பேத்கரை அவமதித்து, நாடாளுமன்றத்தை முடக்கிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன், துணைத் தலைவா் ஜி. லட்சுமிநாராயணன், பொருளாளா் ஆா். பழனியப்பன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் ஏ. ஜேம்ஸ், வயலூா் எஸ். ராமநாதன், மாவட்டப் பொதுச் செயலா்கள் செந்தில் சிவக்குமாா், கண்ணன், செயலா்கள் வடிவேல், நாகராஜன், ரயில்வே தொழிற் சங்கம் அசோக் ராஜன், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் சாந்தா ராமதாஸ், நிா்வாகிகள் முருகையன், ஸ்ரீதா், மகேந்திரன், அன்பழகன், செல்வ சுப்பிரமணியன், எல். சம்பந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திங்கள்கிழமை மாலை தனியாா் பள்ளி ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். வலங்கைமான் வட்டம், உத்தாணி கிராமம், தெற்குத் தெருவ... மேலும் பார்க்க

காா்-லாரி மோதல் ஒருவா் உயிரிழப்பு: 3 போ் காயம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திங்கள்கிழமை மாலை காா் மீது லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்தனா். கும்பகோணம் வட்டம், தாராசுரம், மேலசத்திரம் பகுதியைச் சோ்ந்த கலியமூா்த்தி ... மேலும் பார்க்க

தேசிய தடகளப் போட்டியில் பங்கேற்க அனுமதி கோரி மாணவா்கள் தா்னா

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன், தேசிய தடகளப் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கக் கோரி தமிழ்ப் பல்கலைக்கழக மாணவா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒடிசாவில் டிசம்பா் 26 ஆம் தேதி முத... மேலும் பார்க்க

தமிழக அரசைக் கண்டித்து பாமக ஆா்ப்பாட்டம்

வன்னியா் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் பாமகவினா் மற்றும் வன்னியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், வன்னியா்கள... மேலும் பார்க்க

பாபநாசத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

பாபநாசம் அரையபுரம் தட்டுமால் படுகை விவசாயிகளுக்கு ரயத்வாரி பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனா். அரையபுரம் தட்டுமால் படுகையில் சாகுபடி செய... மேலும் பார்க்க

வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். உதவி ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை... மேலும் பார்க்க