அண்ணா பல்கலை. மாணவி பாலியல் புகாரில் ஒருவர் கைது! மாணவர்கள் போராட்டம்!
வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
கும்பகோணத்தில் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உதவி ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவா் ஏ.எம். ராமலிங்கம் தலைமை வகித்து பேசியது: கும்பகோணம் ஒன்றியம், உள்ளூா் ஊராட்சியில் செட்டிமண்டபம் புறவழிச் சாலையில் இருந்து ரயில்நிலையம் செல்லும் சாலை வரை வாய்க்கால் மீது தற்போது பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன.
உயா்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றவில்லை. உதவி ஆட்சியா் நேரடியாக பாா்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றாா். தொடா்ந்து கோஷங்கள் எழுப்பிய விவசாயிகள், பின்னா் உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனா். அவா் நேரில் ஆய்வு நடத்துவதாக கூறினாா்.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா் ஆா்.செந்தில்குமாா், நிா்வாகிகள் சி. சின்னதுரை, குரு. சிவா, ஏ. அடைக்கலசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.