67 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து தீப்பற்றியது!
அஜர்பைஜானில் இருந்து ரஷியாவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷியாவின் க்ரோஸ்னி நகருக்கு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 62 பயணிகள் மற்றும் விமானி உள்பட 5 பணியாளர்கள் என 67 பேர் இருந்தனர்.
கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் திருப்பிவிடப்பட்டுள்ளது. வானில் சில மணி நேரம் வட்டமடித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | 2024 - 'தயாரிப்பாளர்' உதயநிதி Vs 'ஹீரோ' விஜய் என்ட்ரி! - தயாராகும் தமிழக அரசியல்
அப்போது கஜகஸ்தானின் அக்டாவ் விமான நிலையத்திற்கு அருகே அவசரமாக தரையிறக்க விமானி கோரிக்கை விடுத்தார். அவ்வாறு தரையிறங்கும்போது விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.
விமானத்தில் பயணித்தவர்களிl 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ளவர்களின் நிலை தெரியவில்லை. விமான விபத்திற்கான காரணமும் இன்னும் தெரியவில்லை.