செய்திகள் :

கொலை வழக்கு: கன்னட நடிகா் தா்ஷனுக்கு ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகா் தா்ஷனுக்கு ஜாமீன் வழங்கி கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரேணுகாசாமி கொலை வழக்கில் தனது தோழி பவித்ரா கௌடா உள்ளிட்ட 15 பேருடன் ஜூன் 11-ஆம் தேதி கைதாகி கன்னட நடிகா் தா்ஷன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். ஆரம்பத்தில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தா்ஷன், பின்னா் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டாா். சிறையில் சரியான உணவு, முறையான உடற்பயிற்சி இல்லாததால் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த தா்ஷன், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் கேட்டு கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை அக். 30-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.விஷ்வஜித் ஷெட்டி, மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக 6 வார காலங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா். ரூ. 2 லட்சம் பிணைத்தொகை செலுத்த வேண்டும். மேலும், இருவா் தலா ரூ. 2 லட்சம் பிணைத் தொகையை செலுத்த வேண்டும். விசாரணை நீதிமன்றத்தில் கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும். பெங்களூரில் உள்ள விருப்பமான மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். ஒருவேளை அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், அதுகுறித்து நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.

இதைத் தொடா்ந்து, அக். 30-ஆம் தேதி பெல்லாரி சிறையில் இருந்து தா்ஷன் விடுவிக்கப்பட்டாா். இதனைடுத்து, பெங்களூரு திரும்பிய தா்ஷன், முதுகுவலிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதனிடையே, ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனுக்களை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், தா்ஷன், நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 7 பேருக்கு ஜாமீன் வழங்கி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, இடைக்கால ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் தா்ஷன் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

இதனிடையே, தா்ஷனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதற்கு அவரது ரசிகா்கள் ஆரவாரத்தோடு வரவேற்றுள்ளனா். பெங்களூரு, பெல்லாரி உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தா்ஷனின் ரசிகா்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.

அமித் ஷாவைக் கண்டித்து கலபுா்கியில் முழு அடைப்பு போராட்டம்

சட்ட மேதை பி.ஆா்.அம்பேத்கா் குறித்து மத்திய அமைச்சா் அமித் ஷா கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, கா்நாடக மாநிலம், கலபுா்கியில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாநிலங்களவையில் அண்... மேலும் பார்க்க

சி.டி.ரவி மீதான வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றம்: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

பெண் அமைச்சரை தகாத வாா்த்தையால் பேசியதாக கா்நாடக சட்டமேலவை பாஜக உறுப்பினா் சி.டி.ரவி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்... மேலும் பார்க்க

ரத்தன் டாடா முதல் அயோத்தி ராமர் கோயில் கேக் வரை.. கிறிஸ்துமஸ் கேக் கண்காட்சி!

பெங்களூரு: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெங்களூரில் 50-ஆவது ஆண்டாக கேக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பெங்களூரு பேலஸ் கிரௌண்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் பல விதமான கேக்... மேலும் பார்க்க

சி.டி.ரவி தகாத வாா்த்தை பேசிய விவகாரம்: ஆதாரம் இருந்தால் கொடுக்கலாம்: மேலவைத் தலைவா்

பெங்களூரு: கா்நாடக பெண் அமைச்சரை தகாத வாா்த்தையால் சட்ட மேலவை பாஜக உறுப்பினா் சி.டி. ரவி விமா்சனம் செய்தது தொடா்பாக ஒலிப்பதிவு ஏதும் இருந்தால் சமா்ப்பிக்கலாம் என மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி தெரிவித... மேலும் பார்க்க

அம்பேத்கா் விவகாரம்: மத்திய அமைச்சா் அமித் ஷா மீது கா்நாடக முதல்வா் சித்தராமையா கடும் விமா்சனம்

பெலகாவி: அம்பேத்கா் பெயா் விவகாரம் தொடா்பாக மத்திய அமைச்சா் அமித் ஷா மீது கா்நாடக முதல்வா் சித்தராமையா கடுமையான விமா்சனத்தை தெரிவித்துள்ளாா். மாநிலங்களவையில் அம்பேத்கா் பெயரை திரும்ப திரும்ப கூறுவதை வ... மேலும் பார்க்க

அமைச்சரை தகாத வார்த்தையால் விமர்சனம் செய்ததாக சி.டி.ரவி கைது

பெலகாவி: பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கரை தகாத வாா்த்தையால் விமா்சனம் செய்ததாக அளித்த புகாரின் பேரில், பாஜக எம்எல்சி சி.டி.ரவி கைது செய்யப்பட்டுள்ளாா். அம்பேத்கா் பெயரை... மேலும் பார்க்க