மேட்டூர் அணை நிலவரம்
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை (டிச.25) காலை வினாடிக்கு 2,701 கன அடியிலிருந்து 1,960 கன அடியாக குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க |டங்ஸ்டன் சுரங்க இடம் மறுஆய்வு: நடந்தது என்ன? மத்திய அரசு அறிவிப்பு
அணையின் நீர்மட்டம் 119.41 அடியிலிருந்து 119.46 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 92.53 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணை நீர் வரத்தும், நீர் திறப்பும் இதே நிலையில் இருந்தால், ஓரிரு நாள்களில் மேட்டூர் அணை இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக நிரம்பும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால் அணை முழு கொள்ளளவை எட்டுவது தள்ளிப் போகிறது.