செய்திகள் :

புஷ்பா 2 நெரிசலில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 2 கோடி அறிவித்த படக்குழு!

post image

புஷ்பா 2 திரைப்படத்தைக் காணச் சென்ற ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 2 கோடி நிதியுதவி வழங்குவதாக புஷ்பா 2 படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஹைதராபாத்திலுள்ள திரையரங்கில் கடந்த 4-ஆம் தேதி திரையிடப்பட்ட புஷ்பா 2 சிறப்புக் காட்சிக்கு காவல் துறையின் அனுமதி பெறாமல், திடீரென்று அல்லு அர்ஜுன் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 35 வயது பெண் ஒருவர் மரணமடைந்தார். அவரின் 8 வயது மகனும் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் சிறுவனைக் காண நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த், தயாரிப்பாளர் தில் ராஜு உள்பட சிலர் மருத்துவமனைக்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அல்லு அரவிந்த் கூறியதாவது, ``காயமடைந்த சிறுவன் குணமாகி வருகிறார். தற்போது தானாக சுவாசிக்கிறார். அவர் விரைவில் முழுமையாக குணமடைவார் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அவர்களின் குடும்பத்தை ஆதரிக்கும் வகையில், அல்லு அர்ஜுன் ரூ. 1 கோடியும், புஷ்பா 2 தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரூ. 50 லட்சமும், இயக்குனர் சுகுமார் ரூ. 50 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளனர். சட்டரீதியான கட்டுப்பாடுகளால்தான் முன்அனுமதி இல்லாமல் அவர்களைக் காண முடியவில்லை’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:2024: உலகின் தேர்தல் களங்களும் பதற்றங்களும்!

மேலும், திரைத்துறைக்கும் அரசுக்கும் இடையிலான உறவை வளர்க்கும் வகையில், வியாழக்கிழமை (டிச. 26) முதல்வர் ரேவந்த் ரெட்டியை திரைப்படத் துறைக் குழுவினர் சந்தித்து பேசவுள்ளதாக தில் ராஜு கூறினார்.

கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் டிச. 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தெலங்கானா உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு நான்கு வார இடைக்கால ஜாமீன் வழங்கியது.

வாஜ்பாயின் கனவுகளை முன்னெடுக்கிறார் பிரதமர் மோடி: ராஜ்நாத் சிங்

வாஜ்பாய் கண்ட கனவுகளை முன்னெடுத்துச் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.லக்னெளவில் புதன்கிழமை நடைபெற்ற வாஜ்பாய் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில... மேலும் பார்க்க

காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு விழா: பெலகாவியில் இன்று தொடங்குகிறது

மகாத்மா காந்தி தலைமையில் 1924-இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், பெலகாவியில் இரண்டு நாள் விழா வியாழக்கிழமை தொடங்குகிறது.1924, டிச. 26, 27 ஆம்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்தது தவறு: அஜய் மாக்கன்

நமது நிருபர்ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது தவறு என்று காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன் தெரிவித்தார்.தில்லியில் விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஆம் ஆத்மி, பாஜகவுக்கு எதிரா... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவா் சுட்டுக் கொலை

ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகா் மாவட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய நபா், எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக காவல் துறை கண்காணிப்பாளா் கௌ... மேலும் பார்க்க

நேரு குடும்பத்துக்காக அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ்- ஃபட்னவீஸ் குற்றச்சாட்டு

நேரு குடும்பத்தினரைத் தாண்டி யாரும் வளா்ந்துவிடக் கூடாது என்பதால் பி.ஆா். அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதலே அவமதித்து வந்தது என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் குற்றஞ்சாட்டினாா். நா... மேலும் பார்க்க

நவீன் பட்நாயக், நிதீஷ் குமாருக்கு பாரத ரத்னா- மத்திய அமைச்சா் கோரிக்கை

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் கோரிக்கை விடுத்துள்ளாா். நிதீஷ் குமாா் இப்போது பா... மேலும் பார்க்க