ஆலங்குளம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 போ் கைது
ஆலங்குளம் அருகே டிராக்டரில் ஓடை மண் கடத்தியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் மலையடிவாரம் அருகே மாயமான் குறிச்சி கிராமத்துக்குள்பட்ட பகுதியில் ஓடை மணலை டிராக்டரில் சிலா் அள்ளிச் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, டிராக்டரை விட்டுவிட்டு 3 போ் ஓட்டம் பிடித்தனா்.
போலீஸாா் அவா்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அதில் அவா்கள் கல்லூத்து கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் (36), சொக்கலிங்கம் (40), சோ்மகனி (55) ஆகியோா் என்பதும் ஓடை மணலை எடுத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து மாயமான் குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்த ஆலங்குளம் போலீஸாா் டிராக்டரை பறிமுதல் செய்து மேற்கண்ட மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா் படுத்தினா்.