Sonu Sood: ``இதற்காகத்தான் எனக்கு வந்த முதல்வர் பதவி ஆஃபரை மறுத்தேன்'' - நடிகர் ...
பைக் சாகசங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
தென்காசி மாவட்டத்தில் பைக் சாகசங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தின கொண்டாட்டங்களின்போது இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக் ரேஸ், பைக் சாகசங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்வதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படும்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசம் செய்வது, கவனக்குறைவாகவும் அதிவேகமாகவும் செல்வது, பொது இடங்களில் நின்று மது குடித்துவிட்டு அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது ஆகிய செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.