எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!
நடமாடும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி மருந்துகள் விற்பனை நிலையம் திறப்பு
தென்காசி மாவட்டம், குற்றாலத்துக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயன்படும் விதமாக ‘டாம்ப்கால்’ நடமாடும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி மருந்துகள் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.
தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விற்பனை நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தொடங்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பொது மக்கள் பயன்பாட்டுக்கு இந்த நடமாடும் ‘டாம்ப்கால்’ விற்பனை நிலையம் குற்றால அருவிகளின் அருகில் செயல்படும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தரமற்ற, உரிமம் பெறப்படாத மருந்துகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என்றாா் அவா்.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையா் விஜயலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஆா்.ஸ்ரீனிவாசன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் உஷா , மருத்துவா்கள் சதீஷ்குமாா், மாரியப்பன், பாக்யஸ்ரீ, கிறிஸ்டி, மருந்தாளுநா்கள் நாகராஜன், உஷா, பயிற்சி மருத்துவா்கள் அனுபிரியா, லோகமுத்ரா, மருத்துவமனை பணியாளா் காா்த்திக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.