சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச்...
மும்பை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நாய்; குற்றவாளி விடுவிக்கப்பட்டதாக நடிகை புகார்; பின்னணி என்ன?
மும்பை புறநகர்ப் பகுதியில் இருக்கும் நைகாவ் என்ற இடத்தில் ஒன்றரை வயது நாய்க்குட்டியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த நாய்க்குட்டியை நடிகை ஜெயா பட்டாச்சாரியா மீட்டு தனது கட்டுப்பாட்டில் வளர்த்து வருகிறார்.
இது தொடர்பாக ஜெயா பட்டாச்சாரியா வெளியிட்டுள்ள சோசியல் மீடியா செய்தியில், "நைகாவ்வில் ஒன்றரை வயது நாய்க்குட்டி கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் போலீஸில் புகார் செய்தோம். உடனே போலீஸார் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஆனால் அவரை ஜாமீனில் விடுதலை செய்துவிட்டனர். இப்போது நாய்க்குட்டிக்கு எப்படி நீதி கிடைக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம். நாய்க்குட்டி மட்டுமல்லாமல் சில மாத குழந்தைகள் கூட இது போன்ற கொடுமையை அனுபவித்து வருகின்றன. அவர்களால் தங்களது வலியை வெளிப்படுத்த முடியவில்லை. தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது. நாங்கள் நீதி கோருகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நாய் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. அதனை மீட்டு முறையான சிகிச்சை கொடுத்து வரும் நடிகை பட்டாச்சாரியாவின் செயலை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். ஜெயா விலங்குகள் நல தொண்டு நிறுவனம் ஒன்றில் சேர்ந்து சேவை செய்து வருகிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...