Hormone: பெண்களின் தோழி இந்த ஹார்மோன்... எல்லா மாற்றங்களுக்கும் இதுதான் காரணம்.....
நாடாளுமன்றத்தின் எதிரே தீக்குளித்து தற்கொலை முயற்சி!
புது தில்லி: நாடாளுமன்ற கட்டடத்தின் எதிரே அமைந்துள்ள ரயில்வே பவனில் தீக்குளித்த நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று(டிச. 25) மாலை நாடாளுமன்றத்தின் எதிரே வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், திடீரென தன்னைத் தானே தீப்பற்றிக் கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ரயில்வே காவலர்களும் உடனிருந்தோரும் அவரது உடலில் பற்றியெறிந்த தீயை உடனடியாக அணைக்க முற்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்களும் தீயை அணைத்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் அருகாமையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நபரிடமிருந்து பாதி எரிந்த நிலையில் கிடைத்துள்ள கடிதத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.