சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!
வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி!
முன்னாள் பிரதமா் 'பாரத ரத்னா' அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிக்க : இந்தியாவை வடிவமைத்த ராஜதந்திரி வாஜ்பாய்!- பிரதமா் மோடி புகழாரம்
தொடர்ந்து, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அமித் ஷா, ஜெ.பி. நட்டா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.