செய்திகள் :

Panama : பானாமா கால்வாய் பிரச்னையில் பாய்ச்சல் காட்டும் ட்ரம்ப் - ஒப்பந்த பின்னணியும் சிக்கலும்!

post image

1880-ல் பிரெஞ்சு அரசால் தொடங்கப்பட்டு, பின்னர் நிதி பிரச்னையால் கைவிடப்பட்ட பனாமா கால்வாய் திட்டத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா கையிலெடுத்து கட்டி முடித்தது. அப்போதைய அதிபராக தியோடர் ரூஸ்வெல்ட் ‘இந்த பனாமா கால்வாய், நாட்டு மக்கள் பெருமையோடு திரும்பிப் பார்க்கும் ஒரு மகத்தான சாதனையாக இருக்கும்’ என்று குறிப்பிட்டார். ஆனால், ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அதே கால்வாயை அமெரிக்கா திரும்ப கைப்பற்றும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் விரைவில் அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப்!

அமெரிக்கக் கப்பல் மற்றும் கடற்படைக் கப்பல்களுக்கு மத்திய அமெரிக்க நாடான பனாமா அதிகமான கட்டணம் வசூலிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள ட்ரம்ப், கட்டணத்தைக் குறைக்கவில்லை எனில், பனாமா கால்வாயை அமெரிக்காவில் கட்டுப்பாட்டில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

பனாமாவுக்கு மத்தியில் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைப்பதற்காக சுமார் 82 கிலோமீட்டர் தொலைவுக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு நீர்வழிப்பாதை. இது இல்லையென்றால் கப்பல்கள் தென் அமெரிக்காவின் தெற்கு முனையில் உள்ள கேப் ஹார்னைச் சுற்றி செல்ல சுமார் 11,000 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணிக்க வேண்டியிருக்கும். இந்தக் கால்வாய் பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்களுக்கு குறிப்பிடத்தக்க நேரத்தையும், எரிபொருள் செலவையும் குறைக்கிறது.

எகிப்தின் சூயஸ் கால்வாயைக் கட்டிய ஃபெர்டினாண்ட் டி லெஸ்செப்ஸ் தலைமையில் பனாமா கால்வாயை அமைப்பதற்கான முயற்சி 1880-ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆபத்தான மற்றும் கடுமையான நிலப்பரப்பில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை மலேரியா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் பிற வெப்பமண்டல நோய்கள் தாக்கியதில் ஒட்டுமொத்தமான 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

பனாமா அப்போது கொலம்பியாவின் ஒரு மாகாணமாக இருந்தது. கால்வாய் கட்ட அமெரிக்காவுக்கு ஒப்புதல் வழங்கும் 1901 ஒப்பந்தத்தை ஏற்க பனாமா ஏற்கவில்லை மறுத்தது. இதன் விளைவாக பனாமாவின் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடற்கரைகளுக்கு அமெரிக்க போர்க்கப்பல்களை அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் அனுப்பிவைத்தார்.

பனாமா சுதந்திரம் பெற்ற பிறகான ஓர் அரசியலமைப்பை அமெரிக்கா முன்னரே எழுதி தயார் செய்தது. மேலும், பனாமாவின் எந்தப் பகுதியிலும் தலையிடவும், பொது அமைதி மற்றும் அரசியலமைப்பு ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டவும் அமெரிக்கப் படைகளுக்கு கட்டுப்பாடற்ற உரிமையை வழங்கியது.

1903-ஆம் ஆண்டு நவம்பரில் பனாமாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. விரைவிலேயே கால்வாய் கட்டுமானத்தை தொடங்க அமெரிக்கா தலைமையிலான குழுவுக்கு அனுமதியளிக்கும் ஓர் ஒப்பந்தத்தில் பனாமா கையெழுத்திட்டது. அமெரிக்கா தலைமையிலான கட்டுமான பணிகளின்போது 5,600 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒருவழியாக பணிகள் முடித்து 1914-ஆம் ஆண்டு பனாமா கால்வாய் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. ஆனால், உடனடியாக பனாமா மக்கள் பலரும், கால்வாய் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடு குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

இது தொடர்ந்து நீடித்ததால், 1930-களில் பனாமாவில் தலையிடும் தனது உரிமையை அமெரிக்கா ரத்து செய்தது. 1970-களில், நிர்வாகச் செலவுகள் கடுமையாக அதிகரித்த நிலையில், கால்வாயின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க பனாமாவுடன் அமெரிக்க அரசு பல ஆண்டுகள் பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போதைய அதிபர் ஜிம்மி கார்ட்டரின் நிர்வாகம், பனாமா ராணுவ தலைவராக இருந்த ஒமர் டோரிஜோஸின் அரசாங்கத்துடன் இணைந்து ஆலோசித்தது. ‘நிரந்தர நடுநிலை ஒப்பந்தம்’ மற்றும் ‘பனாமா கால்வாய் ஒப்பந்தம்’ ஆகிய இரண்டு ஒப்பந்தங்களை அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிப்பதே ஒப்புதலுக்கான சிறந்த வாய்ப்பு என்று இரு தரப்பினரும் இறுதியில் முடிவு செய்தனர்.

முதல் ஒப்பந்தம், கால்வாய் எப்போதும் திறந்திருப்பதையும் பாதுகாப்பாகவும் இருப்பதையும் உறுதிசெய்வதற்கான உரிமையை அமெரிக்காவுக்கு வழங்குகிறது. இரண்டாவது ஒப்பந்தம், டிசம்பர் 31, 1999 அன்று கால்வாயை பனாமா அரசிடம் அமெரிக்கா முழுமையாக ஒப்படைந்து விட வேண்டும் என்று கூறியது. ஆனால் பின்னர் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இரண்டு ஒப்பந்தங்களும் 1977-ல் கையெழுத்திடப்பட்டு அடுத்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. 1989-க்குப் பிறகும் கூட, பனாமா தலைவர் மானுவல் நோரிகாவை ஆட்சியை விட்டு அகற்ற, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் H.W.புஷ் பனாமா மீது படையெடுத்தபோதும் இரண்டும் ஒப்பந்தங்களும் அமலில் இருந்தன.

1970-களின் பிற்பகுதியில், ஒப்பந்தங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், கால்வாய் கட்டுப்பாட்டை பனாமாவுக்கு விட்டுக்கொடுக்கும் முடிவை அமெரிக்கர்களில் பாதி பேர் எதிர்த்ததாக கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இருப்பினும், 1999-ஆம் ஆண்டில் கால்வாய் மீதான உரிமை பனாமாவுக்கு கைமாறிய நேரத்தில், அமெரிக்கர்களில் பாதி பேர் அதற்கு ஆதரவு தெரிவித்ததாக கருத்து கணிப்புகள் வெளியானது.

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டத்தை விட பனாமா அரசின் கீழ கால்வாய் மிகவும் திறம்பட செயல்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். 1999 முதல் 2004-ஆம் ஆண்டு வரை கால்வாயில் கப்பல் போக்குவரத்து 17 சதவீதம் அதிகரித்தது. மேலும் பெரிய கார்கோ கப்பல்களை கால்வாயில் அனுமதிக்கும் விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு வரை நீடித்த இந்த விரிவாக்கத்துக்கு சுமார் 5.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவானது.

ட்ரம்ப்

கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியால், கால்வாயில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக கப்பல் போக்குவரத்தை கடுமையாகக் குறைத்து, அதைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தை பனாமா அரசு உயர்த்தியது. தற்போது போதுமான மழை பொழிந்து இயல்பு நிலை திரும்பிவிட்டாலும், நவீன கப்பல் போக்குவரத்துக்கு இடமளிக்கும் வகையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதால் எதிர்கால கட்டண உயர்வு அவசியமாக இருக்கலாம் என்று பனாமா கூறுகிறது.

பனாமாவின் இந்தக் கட்டண உயர்வை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது என்று ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் 1977-ல் போடப்பட்ட ஒப்பந்தம் முட்டாள்த்தனமாக போடப்பட்டது என்றும், பனாமா தங்களை நியாயமான முறையில் நடத்தவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்கு பதில் கொடுத்துள்ள, பனாமா அதிபர் ஜோஸ் ரால் முலினோ, “கால்வாயின் ஒவ்வொரு சதுர மீட்டரும் பனாமாவுக்கு சொந்தமானது. இனியும் அப்படியே தொடரும். சில முக்கிய பிரச்னைகளில் எங்கள் நாட்டு மக்கள் பிளவுபட்டிருந்தாலும், எங்கள் கால்வாய், எங்கள் இறையாண்மை என்று வரும்போது நாங்கள் அனைவரும் எங்கள் பனாமா கொடியின் கீழ் ஒன்று திரள்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

பனாமா உடன் போருக்கு செல்லாமல் 1970-களில் போடப்பட்ட கால்வாய் ஒப்பந்ததை ட்ரம்ப்பால் ரத்து செய்யமுடியாது என்கின்றனர் உலக அரசியல் நோக்கர்கள். ஏற்கெனவே இஸ்ரேல் - பாலஸ்தீனம், இஸ்ரேல் - சிரியா, ரஷ்யா - உக்ரைன் என உலகமே போர் பதற்றத்தில் இருந்துகொண்டிருக்கும் இந்த சூழலில் டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை உலக நாடுகள் மத்தியில் மேலும் அழுத்தத்தை கூட்டுவதாக உள்ளது.!

"தமிழ்நாடு என்ற பெயரைக் 'கஞ்சா நாடு' என மாற்றலாம்..." - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தென் மாவட்டங்களில் பல பிரச்னைகள் இருந்து வரு... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை; அரசுக்கு வலியுறுத்தல்களைப் பட்டியலிட்ட TVK விஜய்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றன... மேலும் பார்க்க

புதுச்சேரி: ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமா? - அமைச்சர் பதிலால் நீடிக்கும் குழப்பம்

புதுச்சேரியில் சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகள் வருகையினாலும், இருசக்கர வாகனங்களின் பெருக்கத்தினாலும் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால் 2025 ஜனவரி 1-ம் தே... மேலும் பார்க்க

``பாப்கார்ன் விவகாரம் மீம்ஸ்களின் மூலம் கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது" - சாடும் காங்கிரஸ்

கடந்த சனிக்கிழமையன்று நிதியமைச்சர் சீதாராமன் தலைமையில் 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் கேரமல் செய்யப்பட்ட பாப் கார்னுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி. விதிக்கப்பட உள்ளதாகவும், பாக்கெட்டில்... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: "திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை" - ராமதாஸ்

சென்னை அண்ணா பல்கலைக்கழகக்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தி.மு.க அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை விமர்சித்துக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இதுகுறித்... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்; 15 பேர் உயிரிழப்பு! - என்ன நடக்கிறது அங்கே?

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்திகா மாகாணத்தின் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் பர்மால் மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 15 பேர் கொ... மேலும் பார்க்க