செய்திகள் :

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: "திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை" - ராமதாஸ்

post image
சென்னை அண்ணா பல்கலைக்கழகக்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தி.மு.க அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை விமர்சித்துக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ராமதாஸ், ``சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை இரண்டு பேர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. சென்னையின் மையப்பகுதியில் உள்ள உலகப்புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வுதான் கொடூரமான எடுத்துக்காட்டு ஆகும். அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் படிக்கின்றனர். அனைத்து நுழைவு வாயில்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசு கூறிக் கொள்கிறது. அது உண்மை என்றால், அனைத்து காவலையும் மீறி மனித மிருகங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது எப்படி?

தமிழகத்தையும், பிற மாநிலங்களையும் சேர்ந்த பெற்றோர்கள் அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் தான் தங்களின் குழந்தைகளைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகிறார்கள். ஆனால், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை, மாணவிகளே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றால் இனி எந்தப் பெற்றோர் தங்களின் மகள்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவார்கள்.

இது பெண் கல்விக்குப் பெருந்தடையாக மாறி விடாதா? தி.மு.க ஆட்சியில் எங்கும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை சரமாரியாக வெட்டியது, பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையைக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது, நீதிமன்றத்திற்குள் நுழைந்து விசாரணைக்கு வந்தவரைப் படுகொலை செய்தது என கொடூர நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நிகழ்வின் போதும் அதற்கு ஏதேனும் காரணத்தைக் கூறி சிக்கலைத் திசை திருப்புவதற்குத் தான் தி.மு.க அரசு முயல்கிறதே தவிர, சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ராமதாஸ் , ஸ்டாலின்

கொலை - கொள்ளை நிகழ்வுகளில் ஈடுபடுபவர்கள், தி.மு.க-வுக்கு ஆதரவாக இருந்து கொண்டு தெரிந்தே குற்றங்களைச் செய்பவர்கள் போன்றோர்தான் பாதுகாப்பாக நடமாட முடிகிறதே தவிர, அப்பாவிகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. தமிழ்நாட்டில் நடப்பவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் தக்க தண்டனையை தி.மு.க அரசுக்கு மக்கள் அளிப்பார்கள்." என்று பதிவிட்டிருக்கிறார்

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PorattangalinKathai

"தமிழ்நாடு என்ற பெயரைக் 'கஞ்சா நாடு' என மாற்றலாம்..." - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தென் மாவட்டங்களில் பல பிரச்னைகள் இருந்து வரு... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை; அரசுக்கு வலியுறுத்தல்களைப் பட்டியலிட்ட TVK விஜய்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றன... மேலும் பார்க்க

புதுச்சேரி: ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமா? - அமைச்சர் பதிலால் நீடிக்கும் குழப்பம்

புதுச்சேரியில் சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகள் வருகையினாலும், இருசக்கர வாகனங்களின் பெருக்கத்தினாலும் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால் 2025 ஜனவரி 1-ம் தே... மேலும் பார்க்க

``பாப்கார்ன் விவகாரம் மீம்ஸ்களின் மூலம் கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது" - சாடும் காங்கிரஸ்

கடந்த சனிக்கிழமையன்று நிதியமைச்சர் சீதாராமன் தலைமையில் 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் கேரமல் செய்யப்பட்ட பாப் கார்னுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி. விதிக்கப்பட உள்ளதாகவும், பாக்கெட்டில்... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்; 15 பேர் உயிரிழப்பு! - என்ன நடக்கிறது அங்கே?

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்திகா மாகாணத்தின் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் பர்மால் மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 15 பேர் கொ... மேலும் பார்க்க