செய்திகள் :

'பாசிச சக்திகளை அனுமதிக்காத தமிழக மக்களை பாரட்டுகிறேன்' - கிறிஸ்துமஸ் விழாவில் தெலங்கானா முதல்வர்!

post image

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 27-வது கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. புண்ணியம் பகுதியில் இருந்து அருமனை வரை ஊர்வலம் நடைபெற்றது. அதில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் தெலங்கானா முதல்வர்  அனுமுலா ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலை வகித்தார். தெலங்கானா முதல்வர் அனுமுலா  ரேவந்த் ரெட்டி மேடையில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார். பின்னர் அனுமுலா ரேவந்த் ரெட்டி பேசுகையில், "நமது தலைவர் ராகுல் காந்தி தீய சக்திகளை எதிர்க்கிறார். அவர் உண்மையான அன்பையும், கிறிஸ்தவத்தினுடைய தன்மையையும் பிரதிபலிக்கக் கூடியவராக இருக்கிறார். உங்கள் அனைவருக்கும் தெரியும் ராகுல் காந்தி அவர்கள் பாரத் ஜோடோ யாத்திரையை இந்த கன்னியாகுமரி மண்ணில் இருந்து தொடங்கினார். இந்த மண்ணிற்கு சொந்தக்காரர்கள் நீங்கள். கேரள மாநில மக்களையும், தமிழ்நாட்டு மக்களையும் நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் நீங்கள் பாசிச சக்திகளை இங்கு அனுமதிக்கவில்லை

அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் கேக் வெட்டிய தெலங்கானா முதல்வர் அனுமுலா ரேவந்த் ரெட்டி

நம்முடைய ஒற்றுமையே நமக்கு பலமாக இருக்கிறது. அந்த ஒற்றுமையை தொடர்வோம். தமிழ்நாட்டு மக்களும், கேரள மக்களும் சாதிய சக்திகளை முறியடிக்கின்ற சிறந்த மக்களாக இருக்கின்றனர். தெலங்கானா மக்களும் கேரளா, தமிழ்நாட்டை பின்பற்றி வாழ விரும்புகிறோம். தெலுங்கானாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என அனைவரும் வசிக்கிறோம். ஆனால் நாங்கள் ஒரு குடையின் கீழ் ஒரே குடும்பமாக வழ்கிறோம்.

கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய தெலங்கானா முதல்வர் அனுமுலா ரேவந்த் ரெட்டி

தெலங்கானா அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் என அனைவருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம். இந்திரா காந்தி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பிலான வீடுகளை கட்டிக் கொடுக்கிறோம். விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கி வருகிறோம். ஏழைகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருகிறோம்" என்றார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை; அரசுக்கு வலியுறுத்தல்களைப் பட்டியலிட்ட TVK விஜய்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றன... மேலும் பார்க்க

புதுச்சேரி: ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமா? - அமைச்சர் பதிலால் நீடிக்கும் குழப்பம்

புதுச்சேரியில் சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகள் வருகையினாலும், இருசக்கர வாகனங்களின் பெருக்கத்தினாலும் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால் 2025 ஜனவரி 1-ம் தே... மேலும் பார்க்க

``பாப்கார்ன் விவகாரம் மீம்ஸ்களின் மூலம் கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது" - சாடும் காங்கிரஸ்

கடந்த சனிக்கிழமையன்று நிதியமைச்சர் சீதாராமன் தலைமையில் 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் கேரமல் செய்யப்பட்ட பாப் கார்னுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி. விதிக்கப்பட உள்ளதாகவும், பாக்கெட்டில்... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: "திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை" - ராமதாஸ்

சென்னை அண்ணா பல்கலைக்கழகக்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தி.மு.க அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை விமர்சித்துக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இதுகுறித்... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்; 15 பேர் உயிரிழப்பு! - என்ன நடக்கிறது அங்கே?

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்திகா மாகாணத்தின் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் பர்மால் மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 15 பேர் கொ... மேலும் பார்க்க

`புதுச்சேரியில் ஆல் பாஸ் முறை ரத்து... இடைநிற்றலுக்கு வாய்ப்பில்லை’ - கல்வி அமைச்சர் நமச்சிவாயம்

மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில், 8-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கும் `ஆல் பாஸ்’ நடைமுறை அமல்படுத்தப்பட்டது.மத்த... மேலும் பார்க்க