செய்திகள் :

தாஜ்புரா அருகே சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் பலி

post image

ஆற்காடு ஆரணி சாலை தாஜ்புரா தனியார் பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாழைப்பந்தல் காவல் உதவி ஆய்வாளர் பலராமன் பலியானார்.

வேலூர் மாவட்டம் மோத்தகல் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பலராமன்(52). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வாழைப்பந்தல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ளார்.

இதையும் படிக்க |சூரியனை மிக நெருக்கத்தில் கடக்கும் நாசா விண்கலம்

இவர் பணி முடிந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் மோத்தகல் திரும்பிக் கொண்டிருந்தபோது ஆற்காடு ஆரணி சாலை தாஜ்புரா

கிராமம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தோர் அவரை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆற்காடு கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: தமிழக அரசுக்கு விஜய் வலியுறுத்தல்!

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் வன்முறை வழக்கு தொடர்பாக விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

கர்நாடக மாநிலம் ஆவேரி மாவட்டத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.ஆவேரி மாவட்டத்தில் ஆவேரி-தர்வாட் நெடுஞ்சாலையில் ஹூபபள்ளி நோக்கி ஒரே குடும்பதைச் சேர்ந்த 4 பேர் தங்களத... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. பாலியல் புகார்: காவல் துறை விளக்கம்!

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வர... மேலும் பார்க்க

பல்கலைகழக வளாகத்தினுள் புகுந்த சிறுத்தைக் குட்டி!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் தாயைப் பிரிந்து பல்கலைகழக வளாகத்தினுள் புகுந்த சிறுத்தைக் குட்டி வனத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.அமராவதி மாவட்டத்திலுள்ள செயின்ட் காட்ஜ் பாபா அமராவதி பல்கலைக்கழகத்தி... மேலும் பார்க்க

புலித்தோல் கடத்திய 11 பேர் கைது!

ஒடிசா மாநிலத்தில் புலித்தோல் கடத்திய 11 பேரை பாலசோர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாலசோர் மாவட்டம் சோரோ நகரில் புலித்தோல் கடத்திய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமிருந்த... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்க ஏல விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் பதில்!

டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் 2,015.51 ஹெக்டேர் பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்த... மேலும் பார்க்க