செய்திகள் :

Manmohan Singh: 6 வழிகளில் மீட்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் - மன்மோகன் சிங்கின் `1991’ ஃப்ளாஷ்பேக்

post image

இந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமரும், இந்தியப் பொருளாதாரத்தின் சிற்பி என்று அழைக்கப்படுபவருமான டாக்டர் மன்மோகன் சிங் தனது 92-வது வயதில் நேற்று காலமானார். மென்மையாகப் பேசும் முன்னாள் பிரதமர், இந்தியாவின் கடினமான சூழல்களிலும் உறுதியான நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பாற்றியவர் என்று இன்றளவும் புகழப்படுகிறார்.

மன்மோகன் சிங்

இந்தியா கடும் பொருளாதார சரிவை சந்தித்த நிலையில், வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தபோது, ​​அப்போது நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதாரப் பாதையை மாற்றியமைக்கும் கொள்கை மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்து நிற்கும் நிலையில், மன்மோகன் சிங்கின் புரட்சிகர கொள்கைகள் அதன் வளர்ச்சிக்கு இன்றளவும் அடித்தளமாக செயல்படுகிறது.

மன்மோகன் சிங் 1991-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த போது, ​``நாம் தொடங்கிய இந்த நீண்ட, கடினமான பயணத்தில் வரவிருக்கும் சிரமங்களை நான் குறைக்கவில்லை. ஆனால், விக்டர் ஹ்யூகோ கூறியது போல், ‘பூமியில் உள்ள எந்த சக்தியாலும், யாருக்கும் நிகழவிருக்கும் நல்லதையும், எண்ணத்தையும் யாராலும் தடுக்க முடியாது' அதுபோல உலகிலேயே இந்தியா ஒரு பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் யோசனையாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுதன் நான் இந்த மகாசபைக்கு என் பரிந்துரைகளை வழங்குகிறேன்." என்றார். அவ்வளவு உறுதியும், நாட்டின் வளர்ச்சியின் மீது அக்கறையும் கொண்டவர் மன்மோகன் சிங்.

மன்மோகன் சிங்

ஜூன் 1991-ல் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக மன்மோகன் சிங் பதவியேற்றார். அந்த நேரத்தில், இந்தியப் பொருளாதாரம் நேருவியன் - சோசலிசம் அடிப்படையில் இயங்கி வந்தது. அப்போது, வெளிநாட்டுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23 சதவிகிதம், உள்நாட்டுப் பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 சதவிகிதம் என்று நிர்ணயிக்கப்பட்டு இந்தியப் பொருளாதாரம் போராடி வந்தது. இந்திய வேலைவாய்ப்பு விகிதம் எதிர் திசையில் பயணித்து பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்தியது.

நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவிகிதமாக இருந்தது. பணவீக்கம் 13 சதவிகிதமாகவும், சில்லறை பணவீக்கம் 17 சதவிகிதமாகவும் உயர்ந்தது. இந்தியாப் பொருளாதாரத்தின் மோசமான நிலையின் விளைவுகள், எல்லா இடங்களிலும், சூழலிலும் உணரப்பட்டது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1990-ல் இருந்ததை விட 1991-ல் 75 சதவிகிதம் குறைவாக இருந்தது. ஒட்டுமொத்தமாக, இந்தியப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு, அதளபாதாளத்துக்கு மிக வேகமாக சென்றுக்கொண்டிருந்தது. இந்தச் சூழலை சமாளிக்க இந்தியாவின் தலைவர்கள் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டிய அவசியத்தில் திக்குமுக்காடி நின்றனர்.

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் நிதியமைச்சராக பொறுப்பேற்றபோது, ​​போராடி வரும் இந்தியப் பொருளாதாரத்தின் வரலாற்றை மாற்றும் முக்கியப் பணியை அவர் எதிர்கொண்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற மன்மோகன் சிங் வணிகம், பொருளாதாரம், உலகமயமாக்கல் ஆகியவற்றில் வலுவான பின்னணியைக் கொண்டிருந்தார். ஐக்கிய நாடுகள் சபையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவர், வெளியுறவு வர்த்தக அமைச்சகத்தில் ஆலோசகராகவும் இருந்தார். 1982-1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்தார்.

மன்மோகன் சிங் இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும் (1972-1976) திட்டக் கமிஷன் தலைவராகவும் (1985-1987) பணியாற்றியவர். எனவே அந்த நேரத்தில் பொறுப்பில் இருந்த எவரையும் விட, மன்மோகன் சிங் இந்தியப் பொருளாதாரத்தின் நுணுக்கங்களை அறிந்திருந்தார் என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால், இவரிடம் இந்திய பொருளாதாரம் தஞ்சமடைந்தது.

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங், நிதியமைச்சகமாக பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்குள் பி.வி. நரசிம்ம ராவ் அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய பணிக்கப்பட்டார். இந்தியப் பொருளாதாரம் மீட்கப்பட வேண்டுமென்றால் பொருளாதார தாராளமயமாக்கல், 'லைசென்ஸ் ராஜ்' போன்ற முடிவுகளை நோக்கி நகர்வது அவசியம் என்பதை மன்மோகன் சிங் தீர்க்கமாக உணர்ந்தார்.

1. பணமதிப்பிழப்பு திட்டம்:

மன்மோகன் சிங் தனது முயற்சியை இரண்டு பணமதிப்பிழப்பு திட்டத்துடன் தொடங்கினார். ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உலகின் முக்கிய நாணயங்களுக்கு எதிராக இந்திய நாணயத்தை ஆரம்பத்தில் ஒன்பது சதவிகிதம் மதிப்பிழக்கச் செய்தது. பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு பதினொரு சதவிகிதமாக அது மேலும் குறைக்கப்பட்டது. இது இந்தியப் பொருளாதாரத்திற்கு சர்வதேச சந்தைகளுடன் வர்த்தகம் மேற்கொள்வதற்கும், அதைக் கையாள்வதற்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளித்தது என்கிறார்கள்.

மன்மோகன் சிங்
2. வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்பது:

மன்மோகன் சிங் இந்தியாவை நேருரிவன் சோசலிச சித்தாந்தத்திலிருந்து வெளியே கொண்டு வந்து, அந்நிய முதலீட்டை வரவேற்க கதவுகளைத் திறந்தார். "தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் (எல்-பி-ஜி)" அறிமுகத்துடன், மன்மோகன் சிங்கின் கொள்கைகள் நாட்டில் தொழில்மயமாக்கலுக்கு ஊக்கமளித்தன. இந்த சீர்திருத்தங்கள் மூலம், இந்திய தொழில்முனைவோருக்கு தேவையான மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு நேரடி அணுகல் வழங்கப்பட்டது.

3. இந்தியாவின் தங்கத்தை அடகு வைத்தல்:

மன்மோகன் சிங்கின் அடுத்த நடவடிக்கை, இந்திய வங்கியின் தங்கத்தை நான்கு தவணைகளாக இங்கிலாந்து வங்கியிடம் அடமானம் வைக்குமாறு ரிசர்வ் வங்கி வாரியத்தை வற்புறுத்தியது. இதன்மூலம், நாட்டின் செயல்பாட்டுக்குத் தேவையான நிதி உதவியை இந்தியா பெற முடிந்தது. 20 டன் தங்கத்தை ஸ்விட்சர்லாந்தின் யூனியன் வங்கிக்கு விற்ற ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடமிருந்த்தே இந்த யோசனை பெற்றதாக பின்னர் தெரிவித்திருந்தார்.

Manmohan singh | மன்மோகன் சிங்
4. இந்தியாவின் வர்த்தகக் கொள்கையை மறுசீரமைத்தல்:

பொருளாதாராம் நாட்டுக்குள் வருவதற்கான வேலைகளுக்குப் பிறகு மன்மோகன் சிங் இந்திய வர்த்தகக் கொள்கையை மறுசீரமைக்க வேண்டியிருந்தது. ஏனெனில் அப்போதைய காலகட்டத்தில் இந்திய வர்த்தகக் கொள்கை எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு தடை விதிக்கப்படும் சூழலில் இருந்தது. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் (எல்பிஜி)யின் கீழ், தேவையற்ற கட்டுப்பாடுகளை அகற்றவும், உரிமம் வழங்கும் செயல்முறையை சீரமைக்கவும், இறக்குமதிகளை ஊக்கப்படுத்துவதற்கு, அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை ஏற்றுமதியுடன் இணைக்கவும் கொள்கை வகுக்கப்பட்டது.

அதே நேரம், "லைசென்ஸ் ராஜ்' கொள்கை விரிவாக்கம் நாட்டின் பொருளாதாரத்தை பெரிய அளவில் திறக்கும் என்பதை அறிந்தும், மன்மோகன்சிங் 'ஏற்றுமதி மானியங்களை ( export subsidies)" அகற்றுவதற்கான கடினமான முடிவையும் எடுத்திருந்தார்.

மன்மோகன் சிங்
5. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி பெறுதல்:

இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, சர்வதேச நாணய நிதியத்திடம் (the International Monetary Fund) பொருளாதார நிவாரணம் பெற மன்மோகன் சிங் முடிவு செய்தார். 220 மில்லியன் டாலர் அவசரக் கடனுக்காக விண்ணப்பித்தார். சர்வதேச நாணய நிதி அமைப்பு முன்வைத்த சில நிபந்தனைகளை இந்தியா பின்பற்ற வேண்டியிருந்தாலும், இந்த நடவடிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் முதலாளித்துவ மற்றும் தாராளமயமாக்கல் அணுகுமுறைக்கும் - மன்மோகன் சிங்கின் சீர்திருத்தங்களுக்கும் இடையே ஒரு இணக்கமான சூழலில் நிர்வகிக்கப்பட்டது.

6. சந்தை கட்டுப்பாட்டாளர்கள்

இறுதியாக மன்மோகன் சிங், கையில் எடுத்தது பங்கு சந்தை. நாட்டில் உள்ள பங்குச் சந்தைகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில், இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI) முழு சட்டப்பூர்வ அதிகாரங்களையும் மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். அதனால், செபி இந்தியாவின் ஒரே சந்தை கட்டுப்பாட்டாளராக மாறியது. மேலும், மன்மோகன் சிங் மென்பொருளை(software) ஏற்றுமதி செய்ய வருமான வரிச் சட்டத்தின் 80 HHC பிரிவின் கீழ் வரிச் சலுகையை அறிவித்தார். இந்த சலுகையின் விளைவாக, இந்திய மென்பொருள் நிறுவனங்களின் அதிக செலவு குறைந்து வளர்ச்சியை நோக்கி நகர்ந்தன.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

இந்த நடவடிக்கைகளின்போது மன்மோகன் சிங் பல எதிர்ப்புகளையும், பல விமர்சனங்களையும் பெற்றிருந்தாலும், இந்தியப் பொருளாதாரத்தை சரிவில் இருந்து காப்பாற்ற அவரால் மட்டுமே அப்போது முடிந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Manmohan Singh : `வரலாறு உங்களிடம் மிகக் கனிவாக இருக்கும்' - சென்று வாருங்கள் மன்மோகன் சிங்

நவீன இந்தியப் பொருளாதாரத்தின் சிற்பிமன்மோகன் சிங்... இவர் அரசியல்வாதி அல்ல. ஆனால், இரண்டு முறைப் பிரதமராக இந்தியாவை வழி நடத்தியிருக்கிறார். தேர்தல் அரசியல் களத்தில் நின்று அவர் பதவிகளைத் தேடிப் போனதில... மேலும் பார்க்க

Manmohan Singh: கரடு முரடான பாதையை சீராக்கி, தொழில்துறை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் மன்மோகன் சிங்

ஜூன், 1991.இந்தியாவின் கஜானாவில் வெறும் 1 பில்லியன் டாலருக்கும் கீழே தான் அந்நிய செலாவணி கையிருப்பு இருந்தது. அது என்ன வெறும் 1 பில்லியன் டாலர் என்று நினைக்காதீர்கள். கடந்த நவம்பர் மாத தரவுகளின் படி, ... மேலும் பார்க்க

`ஞானசேகரன் மீது 20 வழக்குகள்; FIR லீக் ஆனது எப்படி?' - அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கமிஷனர் விளக்கம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைதுசெய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: `காவல்துறை மீது சந்தேகம்...' - கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில், குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாததும், அவர்களின்... மேலும் பார்க்க

`அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் தமிழக டிஜிபி-க்கு 3 உத்தரவுகள்' - தாமாக முன்வந்த தேசிய மகளிர் ஆணையம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், பாதிக்கப்பட்ட மாணவியால் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய... மேலும் பார்க்க