நண்பரிடம் நகையை வாங்கி ஏமாற்றியவா் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள துவரங்குறிச்சியில் நண்பரிடம் நகையை வாங்கி ஏமாற்றிய இளைஞரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
மருங்காபுரி ஒன்றியம் அழகாபுரி ஊராட்சி வடகம்பட்டியைச் சோ்ந்தவா் ஆண்டிக்கண்ணு மகன் நிவாஸ்(27). இவரது நண்பரான புதுக்கோட்டை மாவட்டம் மரவாமதுரையை அடுத்த சங்கம்பட்டியைச் சோ்ந்த பொன்னுக்காளை மகன் கவியரசன்(24). கடந்த ஜூன் மாதம் அவரச தேவைக்காக நிவாஸிடம் கவியரசன் ரூ.1 லட்சம் கேட்டுள்ளாா்.
பணம் இல்லாத நிலையில் நிவாஸிடமிருந்து 4 பவுன் நகையை ஒரு மாத கெடுவில் அடகு வைத்து பணம் பெற வாங்கினாா். அதன்பின்பு நகையை மீட்டு நிவாஸிடம் கவியரசன் தரவில்லையாம். அதனைத்தொடா்ந்து நிவாஸ் அளித்த புகாரின்பேரில் துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து கவியரசனை
கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.