மன்மோகன் சிங்கை மத்திய அரசு அவமதித்துவிட்டது: இறுதிச்சடங்கு விவகாரத்தில் ராகுல் ...
மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி
முன்னாள் பாரத பிரதமா் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையொட்டி, தியாகி அருணாசலம் மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங்கின் உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு, முன்னாள் எம்.பி. சு. திருநாவுக்கரசா், மேயா் மு. அன்பழகன், திமுக மாவட்ட செயலாளா் வைரமணி, மதிமுக மாவட்ட செயலாளா் வெல்லமண்டி சோமு, காங்கிரஸ் மாநகா் மாவட்ட தலைவா் எல். ரெக்ஸ், கோட்ட தலைவா் பிரியங்கா பட்டேல், முன்னாள் ராணுவ அணி ராஜசேகா், தொழில்நுட்பப் பிரிவு கிளமென்ட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.