செய்திகள் :

மன்மோகன் சிங் உடலுக்கு மோடி அஞ்சலி!

post image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானார்.

தில்லி இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிக்க : சாட்டையால் அடித்துக் கொண்டு போராடிய அண்ணாமலை!

இந்த நிலையில், மன்மோகன் சிங் இல்லத்துக்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மன்மோகன் சிங் மறைவையொட்டி, நாடு முழுவதும் 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் ஏற்கெனவே மத்திய அரசு அறிவித்திருந்தது.

மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி

‘இந்தியா மிகுந்த மதிப்புக்குரிய தலைவர்களுள் ஒருவரை இழந்துள்ளது. எளிமையான பின்புலத்திலிருந்து வந்த டாக்டர் மன்மோகன் சிங், போற்றுதற்குரிய பொருளாதார நிபுணராக விளங்கியவர்.

நிதியமைச்சர் உள்பட அரசின் பல்வேறு பதவிகளில் பொறுப்பு வகித்தவர். பொருளாதாரக் கொள்கையில் ஆழமான தடத்தை விட்டுச் சென்றுள்ளார். மக்களின் வாழ்க்கை மேம்பட அவர் பரந்தளவிலான முயற்சிகளை எடுத்தவர்’ எனப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங்குக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கப்படும்: மத்திய அரசு

‘முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதுதொடா்பாக, பிரதமா் மோடிக்கு க... மேலும் பார்க்க

மன்மோகன் சிங்குக்கு நினைவக இடம்: பிரதமருக்கு காா்கே கோரிக்கை

‘நினைவகம் அமைப்பதற்கு ஏதுவான இடத்தில் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நடத்தப்பட வேண்டும்’ என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பிரதமா் மோடியிடம் வெள்ளிக்கிழமை கோரியுள்ளாா்.மன்மோகன் சிங்கின் இறுதி... மேலும் பார்க்க

இன்று மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு

புது தில்லி: மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு தில்லியில் சனிக்கிழமை நடைபெறுகிறது. அவரின் உடலுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதம... மேலும் பார்க்க

சாக்லேட்தான் உணவு: கேம்ப்ரிட்ஜ் பல்கலை.யில் மன்மோகன் சிங்கின் ஏழ்மை நிலை!

நாட்டின் சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதியான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கேப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார். 1950 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் நினைவிடம் அமைக்கும் இடத்தில் இறுதிச்சடங்கு: காங்கிரஸ் கடிதம்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை நினைவிடம் கட்டக்கூடிய இடத்தில் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.முன்னாள் பிரதமர் மன்மோக... மேலும் பார்க்க

சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் காலமானார்!

சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார். அவருக்கு வயது 94. லிம்போமா என்னும் ஒருவகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நி... மேலும் பார்க்க