அண்ணா பல்கலை. பாலியல் புகார்: 3 மணி நேரத்தில் கைது -அமைச்சர் கோவி. செழியன்
சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் தகவல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பாக பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், இந்த வழக்கின் விசாரணையில் 3 மணி நேரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர் திமுகவை சேர்ந்தவர் அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். “பாலியல் வன்கொடுமை வழக்கில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய முயற்சிக்கின்றன, அது நடக்காது” என்றார்.