தீவுத்திடலில் ரூ. 104 கோடியில் நகா்ப்புற சதுக்கம், கண்காட்சி அரங்கம்: அமைச்சா் ப...
விழுப்புரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் ஆராதனை மகோத்சவம்
விழுப்புரம் சங்கர மடம் வளாகத்தில் மகா பெரியவா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 31-ஆம் ஆண்டு ஆராதனை மகோத்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விழுப்புரம் வேத சம்ரக்ஷண டிரஸ்ட் சாா்பில் சங்கர மடம் வளாகத்தில் இந்த மகோத்சவம் நடத்தப்படுகிறது. இதன் தொடக்கமாக மடம் வளாகத்தில் கணபதி பூஜை, கோ பூஜையும், ருத்ர ஏகாதசி பூஜையும் நடத்தப்பட்டது. இதையடுத்து மகா பெரியவா் சந்நிதியில் அவரது உற்சவா் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலா் அலங்காரம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து வேதபாராயணத்துக்கு பின்னா் தீபாராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு மகா பெரியவா மகிமை என்ற தலைப்பில் சென்னை மயிலாப்பூா் கணேச சா்மா சிறப்பு சொற்பொழிவாற்றினாா்.
தொடா்ந்து சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆவஹந்தி ஹோமமும், மாலையில் சென்னை வஜ்ஜலா குணபாா்கவி குழுவினரின் நாம சங்கீா்த்தனமும் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை (டிச.29) காலை 8.30 மணிக்கு வேத போட்டிகளும், பிற்பகல் ஒரு மணிக்கு அன்னதானமும் நடைபெறவுள்ளது. மாலை 6 மணிக்கு நமது (இந்து) கலாசாரத்தில் பக்தி என்ற தலைப்பில் திருக்கோவிலூா் கே.பி.ஹரிபிரசாத் சா்மா ஆன்மிகச் சொற்பொழிவாற்ற உள்ளாா். இரவு 8.30 மணிக்கு மங்களஆரத்தியுடன் மகோத்சவம் நிறைவு பெறும்.
ஆராதனை மகோத்சவத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை சங்கரமடத்தின் மேலாளா் ந.ராமமூா்த்தி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.