வதந்திகளை கண்டு கொள்ளாதீர்கள்; இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அறிவுரை!
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வலியுறுத்தல்
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும் என்று, கடலூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
கட்சியின் மாவட்ட குழுக் கூட்டம் சூரப்ப நாயக்கன் சாவடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ் பாபு தலைமை வகித்தாா்.
மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி, மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் உதயகுமாா், கருப்பையன், ராமச்சந்திரன், சுப்புராயன், திருவரசு, ரவிச்சந்திரன், தேன்மொழி, ராஜேஷ் கண்ணன், அமா்நாத், பிரகாஷ், வாஞ்சிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தமிழக அரசு பொங்கல் பண்டிகை பரிசுத் தொகுப்பு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதேநேரத்தில், குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1000 வழங்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.