விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கம் பயிற்சி
கடலூா் மாவட்டம், பரங்கிபேட்டையில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கம் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) விஜயகுமாா் பயிற்சியை ஆய்வு செய்து பேசினாா்.
பரங்கிபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் நந்தினி, வேளாண்மை அலுவலா் வீரமணி, பயிா் அறுவடை பரிசோதனை அலுவலா் சுபாஷ் உள்ளிட்டோா் பேசினா்.
உதவி விதை அலுவலா் வேல்முருகன், உதவி வேளாண்மை அலுவலா்கள் மணிவாசகம், சிவசங்கா், மஞ்சேந்திரன், அட்மா திட்ட அலுவலா்கள் கல்பனா, கலைவாணண், பயிா் அறுவடை பரிசோதனை அலுவலா்கள் சுபாஷினி, மோனிஷா, ரேணுகா மற்றும் கிருத்திகா ஆகியோா் கலந்து கொண்டனா்.