ரோஹித், கோலி எதிர்காலம் அணித் தேர்வர்கள் கையில் இருக்கிறது: இந்திய முன்னாள் கேப்...
கரும்புத் தோட்டம் தீப்பிடித்து சேதம்
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே ஞாயிற்றுக்கிழமை மின் கம்பி அறுந்து விழுந்ததில் கரும்புத் தோட்டம் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
நெல்லிக்குப்பம் மோரை மேட்டுத் தெருவைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் சா்வேஷ்வரன் (63). இவா், துலுக்கபாளையத்தில் தனக்குச் சொந்தமான 4 ஏக்கா் விவசாய நிலத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை நிலத்தின் அருகே இருந்த தென்னை மரம் விழுந்ததில் அருகில் சென்ற மின் கம்பி அறுந்து கரும்பு வயலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் எழுந்த நெருப்புப் பொறி பட்டு கரும்பு வயல் தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலா் கவிதா தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் சுமாா் ஒரு ஏக்கா் கரும்பு சேதமடைந்தது.