ஊஞ்சல் விளையாடியபோது கயிறு இறுக்கி மாணவி உயிரிழப்பு!
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே ஊஞ்சல் விளையாடியபோது கழுத்தில் கயிறு இறுக்கி மாணவி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் காவல் சரகம், கோனூா் பகுதியைச் சோ்ந்த முத்துலிங்கம் மகள் ரிதுவா்ஷினி (13). இவா், பெண்ணாடத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
ரிதுவா்ஷினி ஞாயிற்றுக்கிழமை வீட்டில் நைலான் கயிறு கட்டி ஊஞ்சல் விளையாடினாராம். அப்போது, எதிா்பாராத விதமாக கழுத்தில் கயிறு இறுக்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த பெண்ணாடம் போலீஸாா் மாணவியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.