ரஷித் கான் அபார பந்துவீச்சு; டெஸ்ட் தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
பள்ளிகளில் புதிய கட்டடங்கள் திறப்பு
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள சமட்டிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகள் வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
நெய்வேலி தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த வகுப்பறைக் கட்டடங்களை சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். இதனைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களையும் அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சமட்டிகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் பூவராகவன், துணைத் தலைவா் பாஸ்கா், ஒன்றியச் செயலா் குணசேகரன், அவைத் தலைவா் வீரராமச்சந்திரன், மாவட்டப் பிரதிநிதிகள் அன்பழகன், சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.