வதந்திகளை கண்டு கொள்ளாதீர்கள்; இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அறிவுரை!
அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பொங்கல் போனஸ்: கு.பாலசுப்ரமணியன் கோரிக்கை
அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் போனஸ் வழங்குவது வழக்கம். எனவே, எந்தவித நிபந்தனைகளுமின்றி ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனஸாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
போனஸ் வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லாத பணியாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்படுவதைப் போல, தூய்மைக் காவலா்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.
பொங்கல் பண்டிகைக்கு முன்பே தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் ஆகியோா்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்றாா் கு.பாலசுப்ரமணியன்.