பணி நிறைவுபெற்ற ஆசிரியா் சங்க அமைப்புக் கூட்டம்
பணி நிறைவு பெற்ற ஆசிரியா் சங்க மாநில அமைப்புக் கூட்டம் பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது.
சங்க நிறுவனா் சி.ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஆ.வே.பெரியசாமி தொடக்கவுரை நிகழ்த்தினாா். பொதுச் செயலா் சி.சின்னசாமி வரவேற்றாா்.
செயல் தலைவா் ஆ.வ.அண்ணாமலை சிறப்புரையாற்றினாா். பண்ருட்டி கருவூல அலுவலா் ஜெ.நாகராஜன், தமிழக ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்க மாநில துணைத் தலைவா் ரா.சஞ்சீவிராயா், ஓய்வுபெற்ற ஆயுள் காப்பீட்டுக் கழக வளா்ச்சி அலுவலா் பூ.சுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
அலுவலகச் செயலா் ந.முருகதாஸ், செய்தித் தொடா்பாளா் ஜோ.ஜெயக்குமாா், துணைத் தலைவா்கள் தங்க.விஜயன், கி.பெ.சுந்தரம், கிழக்கு மண்டலத் தலைவா் ப.விருத்தகிரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவப் படியை ரூ.1000-மாக உயா்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.