ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரானது பாகிஸ்தான்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக பாகிஸ்தான் புதன்கிழமை பொறுப்பேற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு அந்த கவுன்சிலில் பாகிஸ்தான் அங்கம் வகிக்கும்.
இது குறித்து ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதா் முனீா் அக்ரம் கூறுகையில், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினா் என்ற முறையில் பாகிஸ்தான் ஆக்கபூா்வமாக செயல்படும். கவுன்சிலில் பாகிஸ்தானின் இருப்பை அனைவரும் உணரும் வகையில் செயல்படுவோம்’ என்றாா் அவா்.
15 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக பாகிஸ்தான் நியமிக்கப்படுவது இது எட்டாவது முறையாகும். இதற்காக ஐ.நா. பொதுச் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக 182 வாக்குகள் பதிவாகின.