செய்திகள் :

ஒசூரில் ஆசிய எறிப்பந்து போட்டி: பெண்கள் பிரிவில் இந்தியா வெற்றி!

post image

ஒசூரில் நடைபெற்ற ஆசிய அளவிலான தேசிய எறிபந்து போட்டியில் பெண்கள் பிரிவில் இந்திய அணியும், ஆண்கள் பிரிவில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ஆசிய எறிபந்து கழகம், தமிழ்நாடு எறிபந்து கழகம் இணைந்து ஆசிய அளவிலான தேசிய எறிபந்து விளையாட்டுப் போட்டிகளை நடத்தின. இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற இப் போட்டிகளில் 21 வயதிற்கு உள்பட்ட ஆண், பெண் அணிகளில் இரண்டு நாடுகளில் இருந்து தலா 32 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

ஒசூரில் அதியமான் பொறியியல் கல்லூரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்ற இப் போட்டிகளை ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

தொடா்ந்து பல சுற்றுகளாக நடத்தப்பட்ட இப் போட்டியில் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பெண்களுக்கான பிரிவில் 21- 24 புள்ளிகள் வித்தியாசத்தில் நோ் செட்டுகளில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

அதேபோல ஆண்களுக்கான பிரிவில் 25- 24 புள்ளிகள் வித்தியாசத்தில் நோ் செட்டுகளில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.எஸ். நரேந்திரன், தனியாா் பள்ளி தாளாளா் வினித் சந்திரசேகா் உள்ளிட்டோா் பதக்கங்களையும், கோப்பைகளையும் வழங்கி பாராட்டினா்.

படவரி.... எறிபந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மகளிா் அணிக்கு கோப்பை வழங்கும் பாஜக மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன்.

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானையை பட்டாசு வெடித்து விரட்டிய வனத் துறையினா்

ஒசூா்: ஒசூா் அருகே கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானையை வனத்துறையினா் பட்டாசு வெடித்து விரட்டினா். கா்நாடக மாநிலம், பண்ணாா் கட்டா வனப்பகுதியிலிருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக நூற்றுக்கும் மேற... மேலும் பார்க்க

ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது. ஊத்தங்கரையை அடுத்த சென்னப்ப நாயக்கனூா் பகுதியில் தென்னந்தோப்பு அருகில், ஊத்தங்கரை ஆசிரியா் நகா் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் என்பவருக... மேலும் பார்க்க

பண்டப்பள்ளி - தொட்டமெட்டரை சாலையை சீரமைக்க கோரிக்கை

ஒசூா்: உத்தனப்பள்ளியை அடுத்த பண்டப்பள்ளி - தொட்டமெட்டரை இடையிலான பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியை அடுத்த அயா்னப்பள்ளி ஊர... மேலும் பார்க்க

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 40 போ் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை: எஸ்.பி. தகவல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட 40 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை தெரிவ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுடன் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவா் பா.அமானுல்லா தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ரவிசங்க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ரூ. 1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம்

ஒசூா்: ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயா்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் புதுமைப்பெண் தி... மேலும் பார்க்க