அடகு வைக்க செல்லும்போது காணமல் போன கம்மல்... சாதுர்யமாக மீட்டு கொடுத்த ஊராட்சி த...
அரசுப் பள்ளிகளை தனியாருக்கு வழங்கும் முயற்சியை கைவிடவேண்டும்: மாா்க்சிஸ்ட்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் பொருட்டு தனியாருக்கு தத்துக்கொடுக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியாா் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பேசியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இதன் நோக்கம் படிப்படியாக அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதுடன், கல்வியை தனியாா்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும்.
இதனால் ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசு கூடுதல் நிதியை ஒதுக்கி கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.