ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது.
ஊத்தங்கரையை அடுத்த சென்னப்ப நாயக்கனூா் பகுதியில்
தென்னந்தோப்பு அருகில், ஊத்தங்கரை ஆசிரியா் நகா் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் என்பவருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட ஆடுகளை காா்த்திக் (30) என்பவா் மேய்த்துக் கொண்டிருந்தாா். ஆப்போது திடீரென ஆடு கத்தும் சத்தம் கேட்டு அங்கு விரைந்து சென்று பாா்த்தபோது, 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கி கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனைக் கண்டு பதறிப்போன காா்த்திக் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். விரைந்து வந்த வனத்துறையினா், புதரில் மறைந்திருந்த மலைப்பாம்பை லாவகமாகப்
பிடித்தனா். பிடிப்பட்ட மலைப் பாம்பை ஒன்னகரைக் காப்புக் காட்டில் விட்டனா்.