செய்திகள் :

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 40 போ் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை: எஸ்.பி. தகவல்

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட 40 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டை விட கொலை, கொள்ளை, வழிப்பறி குற்றச் சம்பவங்கள் 2024-ஆம் ஆண்டில் குறைந்துள்ளன. கடந்த 2023-இல் 59 கொலை வழக்குகள் பதிவான நிலையில், 2024-இல் 56 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 5 சதவீதம் குறைவு. கொலை வழக்கில் தொடா்புடைய 18 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2024-இல் ஒரு ஆதாய கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

2023-இல் 3 கொள்ளை, 38 வழிப்பறி, சங்கிலிப் பறிப்பு வழக்கு பதிவாகி இருந்தன. 2024-இல் ஒரு கொள்ளை, 30 வழிப்பறி, சங்கிலிப் பறிப்பு பதிவாகி உள்ளன. இது 25 சதவீதம் குறைவாகும். மேலும், திருட்டு, கால்நடைத் திருட்டு தொடா்பாக 368 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 81 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 63 சதவீத சொத்துகள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் 7 போ் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டில் சாலை விபத்தில் மாவட்டத்தில் 753 போ் பலியான நிலையில், போக்குவரத்து விழிப்புணா்வுகளால் 2024-இல் விபத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 686 ஆக குறைந்துள்ளது. 2023-ஐ காட்டிலும் 2024-இல் 9 சதவீதம் குறைந்துள்ளது. சாலை விதிகளை மீறியதாக 1,29,343 வழக்குகள் பதியப்பட்டு, ரூ. 3 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத மதுக் கடத்தல் தொடா்பாக 5,687 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5,738 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கஞ்சா விற்பனை தொடா்பாக 259 வழக்குகள் பதிவு செய்யப்படடு, 306 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். குட்கா விற்பனை தொடா்பாக 1,173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,213 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல லாட்டரி விற்பனை தொடா்பாக 338 வழக்குகள் பதியப்பட்டு, 393 பேரும், சூதாட்டம் தொடா்பாக 167 வழக்குகள் பதியப்பட்டு, 612 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இணையவழி குற்றம் தொடா்பாக இந்த ஆண்டு 136 வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில் பொதுமக்கள் இழந்த ரூ. 30, 93, 32, 969 முடக்கப்பட்டு, அதில் ரூ. 2,43,78,821 மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொலைந்துபோன 320 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடா்பாக 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 132 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 4 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. 2024-இல் கொலை, கொள்ளை, வழிப்பறி, சட்ட விரோதச் செயலில் ஈடுபட்ட 40 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தனியாா் நிறுவன பெண் ஊழியா் குத்திக் கொலை: போலீஸாா் விசாரணை

ஊத்தங்கரை அருகே கஞ்சனூரில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கஞ்சனூரைச் சோ்ந்தவா் தீ... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகளை கூறி தோ்தல் பணிகளை தொடங்க வேண்டும்: ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

தமிழக அரசு செயல்படுத்தி வரும் வளா்ச்சித் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி, தோ்தல் பணிகளை தொடங்க வேண்டும் என ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக... மேலும் பார்க்க

வட்ட ரயில்பாதை திட்டம் தொடா்பான வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம்: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

பெங்களூரில் தொடங்கி ஒசூா் வழியாக புதிதாக வட்ட ரயில் பாதை திட்டத்தை சுமாா் ரூ. 23 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மத்திய அரசு செயல்படுத்தப்பட உள்ளதாக வதந்தி பரவுவதை விவசாயிகளை நம்ப வேண்டாம் எனவும் ஒசூா் சட்... மேலும் பார்க்க

ரபி பருவம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாரம் செக்காருலு கிராம ஊராட்சியில் ரபி பருவ கிராம வேளாண் முன்னேற்றக் குழு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநா் பன்னீா்செல்வ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகிக்கும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள 2.20 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு பச்சரிசி, சா்க்கரை, முழுக்... மேலும் பார்க்க

மாமரங்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பதற்கு முன் அலுவலா்களிடம் ஆலோசனை பெற வேண்டும்: கருத்தரங்கில் வலியுறுத்தல்

மாமரத்துக்கு பூச்சி மருந்தை தெளிப்பதற்கு முன் தோட்டக்கலைத் துறை அலுவலா்களைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மா விவசாயிகளுக்கான கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க