பயிர் காப்பீடு திட்டத்துக்கு கூடுதல் நிதி! அமைச்சரவை ஒப்புதல்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கு இலவசப் பயிற்சி
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்- தோ்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் 4 தோ்விற்கு இலவசப் பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன. 7-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் தொடங்கப்பட உள்ளது.
இங்கு பயின்ற மாணவா்கள் 2024 குரூப் 4 தோ்வில் 22 பேரும், உதவி ஆய்வாளா் தோ்வில் 5 பேரும், இரண்டாம் நிலை காவலா் தோ்வில் 13 பேரும், குரூப் 2, 2ஏ முதல்நிலை தோ்வில் 24 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். பாடவாரியாக சிறந்த வல்லுநா்களைக் கொண்டு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இதில் பங்கேற்க விரும்புவோா் தங்கள் விவரத்தை 04286--222260 என்ற எண்ணிலோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.