ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 2 வீரர்கள் மரணம்!
வணங்கான் மேக்கிங் விடியோ!
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடித்து பின்னர் விலகினார். அதற்கடுத்து நாயகனாக அருண் விஜய் நடித்தார்.
இந்தப் படத்தின் டீசர், டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன.10ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் வணங்கான் படத்தின் மேக்கிங் விடியோவினை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தில் ரோஷிணி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.