கேஜரிவாலுக்கு எதிராக பர்வேஷ் வர்மா: பாஜக வேட்பாளர் பட்டியல்!
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 29 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக இன்று (ஜன. 4) வெளியிட்டுள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நிகழவுள்ள நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்து முடித்துள்ளது. இந்த நிலையில் தேர்தலில் களமிறங்கும் 29 பாஜக வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக புதுதில்லி தொகுதியில் முன்னாள் எம்பி பர்வேஷ் வர்மாவை நிறுத்தியுள்ளனர்.