எச்எம்பிவி வைரஸ் இந்தியாவுக்கு புதிதல்ல.. ஏற்கனவே இருக்கும் வைரஸ்தான்!
பும்ராவின் உடல்நிலை எப்படி இருக்கிறது? நாளை விளையாடுவாரா?
இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரீத் பும்ராவின் காயம் குறித்து மருத்துவக்குழு தொடர் கண்காணிப்பில் இருப்பதாக இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
சிட்னி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியின் 2ஆம் நாள் மதிய உணவுக்குப் பிறகு பும்ரா ஆடுகளத்தில் இல்லை.
பும்ரா 3 மணி நேரம், 20 நிமிடம் களத்தில் இல்லாமல் இருந்தார். அவருக்குப் பதிலாக விராட் கோலி இந்திய அணியை வழிநடத்தினார்.
இதற்கு முன்பாக ஜஸ்பிரீத் பும்ராவுக்கு 2022 - 2023ஆம் ஆண்டுகளில் முதுகு பகுதிகளில் ஏற்பட்ட பிரச்னைகளால் விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
31 வயதாகும் பும்ரா மொத்தமாக இந்தத் தொடரில் 32 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். 46 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி. மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவராக பும்ரா சாதனை படைத்துள்ளார்.
சிட்னி டெஸ்ட்டில் 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
ஸ்கேன் எடுக்கச் சென்ற பும்ரா மீண்டும் ஓய்வறைக்கு திரும்பிய காட்சிகளை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் பும்ராவின் உடல்நிலை குறித்து பிரசித் கிருஷ்ணா கூறியதாவது:
பும்ராவுக்கு முதுகில் தசைப்பிடிப்பு. அதற்காக ஸ்கேன் செய்ய சென்றார். மருத்துவக்குழு அவரை கண்காணித்து வருகிறது. அவர்கள் அனுமதி கொடுத்தால் மீண்டும் விளையாடுவார் என்றார்.