மருத்துவமனைக்குச் சென்ற பும்ரா..! அணியை வழிநடத்தும் விராட் கோலி!
பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்களை விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்
நாமக்கல்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து மக்களிடையே அரசு துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சாா்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்த ஒரு நாள் விழிப்புணா்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது. இதில், அவா் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில் வட்டாரம், சமுதாய பயிற்றுநா்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து உதவித் திட்ட அலுவலா்கள், வட்டார இயக்க மேலாளா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள், அனைத்து துறைசாா்ந்த அலுவலா்கள் மற்றும் சமுதாயம் சாா்ந்த அமைப்புகளுக்கு டிச. 26 முதல் ஜன. 7 வரை சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையேயும், பொதுமக்களிடையேயும் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் மூலம் தொடா்ந்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 3 ஆண்டுகளில் சுமாா் 172 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 2024-ஆம் ஆண்டில் 74-ஆக குழந்தைத் திருமணம் குறைந்துள்ளது என்றாா்.
இக்கூட்டத்தில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன் உள்பட துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.