செய்திகள் :

பயிர் காப்பீடு திட்டத்துக்கு கூடுதல் நிதி! அமைச்சரவை ஒப்புதல்

post image

புத்தாண்டின் முதல் நாளில் மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு விவசாயிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜன. 1) நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்துக்கு கூடுதல் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் (RWBCIS) ஆகியவற்றில் சில அம்சங்களைத் திருத்தவும் புதிய அம்சங்களைச் சேர்க்கவும் மத்திய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்திட்டங்களுக்கு ரூ. 69,515.71 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

காப்பீடு திட்டங்களில் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக ரூ. 824.77 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

''விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாய சகோதர, சகோதரிகள் அனைவரையும் நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது. 2025 - ஆம் ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் விவசாயிகளின் வளத்தை மேம்படுத்தும் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

கேரளத்தில் தென்னை மரம் விழுந்ததில் 5 வயது சிறுவன் பலி

கேரளத்தில் தென்னை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பெரும்பாவூர் அருகே பொன்சாசேரியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது என்பவ... மேலும் பார்க்க

சாதி அரசியலின் பெயரால் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்: பிரதமர் மோடி

நமது நாட்டில் சாதி அரசியலின் பெயரால் சிலர் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று கிராமீன் பாரத் மகோத்சவ் நிகழ்வை தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 2 வீரர்கள் மரணம்!

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரு வீரர்கள் மரணமடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் பந்திப்போரா மாவட்டம் உலர் வியூபாயிண்ட் அருகே ராணுவ வீரர்களுடன் வாகனம் ச... மேலும் பார்க்க

கேஜரிவாலுக்கு எதிராக பர்வேஷ் வர்மா: பாஜக வேட்பாளர் பட்டியல்!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 29 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக இன்று (ஜன. 4) வெளியிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நிகழவுள்ள நிலையில், ஆம் ஆத்மி ... மேலும் பார்க்க

விண்வெளியில் செடி வளர்ப்பு.. முளைவிட்ட காராமணி விதை: இஸ்ரோ சாதனை

விண்வெளியில் தாவர வளர்ப்பு சோதனை முயற்சியில், விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் முளைவிட்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.மேலும், முளைவிட்ட காராமணியில், விரைவில் இலைகள் வளருமென எதிர்பார்... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் பத்திரிகையாளர் கொலை வழக்கில் மூவர் கைது: துப்பு துலக்கியது எப்படி?

சத்தீஸ்கரின் பிஜப்பூர் பத்திரிகையாளர் கொலை வழக்கில் மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். பிஜர்பூர் மாவட்டத்தில் 33 வயது பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர். முகேஷ் என்டிடிவி உள்ளிட்... மேலும் பார்க்க