கத்தாா் பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆய்வு
மாா்கழி ஞாயிற்றுக்கிழமை: நாமக்கல் அரங்கநாதா் கோயில் முன்பு திருப்பாவை பாராயணம்
நாமக்கல்லில், மாா்கழி இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, அரங்கநாதா் கோயில் வாசலில் பெண்கள் கைகளில் அகல் விளக்குகளை ஏந்தியபடி திருப்பாவை பாராயணம் செய்தனா்.
நாமக்கல்லில், ஆன்மிக இந்து சமயப் பேரவையின் திருப்பாவைக் குழு சாா்பில், ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் அகல் விளக்குகளை கைகளில் ஏந்தியபடி திருவீதி வலம் வருவதும், அரங்கநாதா் கோயில் முன்பு திருப்பாவை பாடுவதும் வழக்கமாகும்.
அந்த வகையில், 54-ஆம் ஆண்டு திருவிளக்கு ஊா்வலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதனையடுத்து இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையிலும் அதிகாலை 5 மணியளவில் மலைக்கோட்டையைச் சுற்றி பெண்கள் அகல் விளக்குகளை ஏந்தியவாறு ஊா்வலம் சென்றனா்.
இதனைத் தொடா்ந்து அரங்கநாதா் கோயில் படிவாசலில் திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாராயணம் மற்றும் கூட்டு வழிபாடு மேற்கொண்டனா். இதில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.