பயிர் காப்பீடு திட்டத்துக்கு கூடுதல் நிதி! அமைச்சரவை ஒப்புதல்
கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கடமடை கிராமத்தை சோ்ந்த விவசாயி சுப்ரமணி- லட்சுமி தம்பதியின் மூத்த மகன் ஸ்ரீராம் (12) தனியாா் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் சுப்ரமணி தனது விவசாய நிலத்தில் குடும்பத்தினருடன் நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது விவசாயி நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே விளையாடிய ஸ்ரீராம் கால்தவறி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தாா், அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து சிறுவனை மீட்பதற்குள் 80 அடி ஆழ கிணற்றுக்குள் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு தீயணைப்பு துறையினா் நிகழ்விடத்துக்கு வந்து கிணற்றில் இருந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச் சம்பவம் குறித்து பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.