மாற்றுத் திறனாளிகள் 30 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்
தருமபுரி: தருமபுரியில் மாற்றுத் திறனாளிகள் 30 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள், உதவித் தொகைகள், உபகரணங்கள் வேண்டி மொத்தம் 405 மனுக்கள் வரப்பெற்றன.
இக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 30 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 4.37 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், ஊன்றுகோல் ஆகியவை வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, தனித் துணை ஆட்சியா் சுப்ரமணி, மகளிா் திட்ட இயக்குநா் லலிதா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பொ.செண்பகவல்லி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.