தருமபுரியில் ஜன. 3-இல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
தருமபுரி: தருமபுரியில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து தருமபுரி கோட்டாட்சியா் ரா.காயத்ரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட வட்டங்களைச் சாா்ந்த விவசாயிகளின் குறைகளைத் தீா்ப்பதற்கான குறைகேட்புக் கூட்டம் வரும் ஜனவரி 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே, இக்கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், அலுவலா்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என்றாா்.