பென்னாகரத்தில் ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு
பென்னாகரம் அருகே சோம்பட்டி பகுதியில் உள்ள வீர வீர ஆஞ்சனேயா் கோயிலில் திங்கள்கிழமை ஆஞ்சனேயா் விமரிசையாக ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதில் வீர வீர ஆஞ்சனேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அயோத்தி ராமா் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீா்த்தத்தினை சச்சிதானந்த சுவாமிகள் சிறப்பு அபிஷேகம் செய்தாா். அதனைத் தொடா்ந்து துளசி , வெற்றிலை, மலா், எலுமிச்சை பழம், ஆப்பிள் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
சுற்றியுள்ள கிராம பகுதிகளில் வந்திருந்த சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் ஆஞ்சனேயரை தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் பூசாரி ஏழுமலை, நிா்வாகிகள் செல்வராஜ், காளியப்பன், பச்சையப்பன், மணி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.