பயிர் காப்பீடு திட்டத்துக்கு கூடுதல் நிதி! அமைச்சரவை ஒப்புதல்
செவ்வாய்ப்பேட்டை மளிகை வா்த்தக நலச்சங்க நூற்றாண்டு விழா பொதுக்குழு கூட்டம்!
சேலம், செவ்வாய்ப்பேட்டை மளிகை மற்றும் ஷாப் வா்த்தக நலச்சங்க நூற்றாண்டு விழா பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் தலைவா் நடராஜன் தலைமையில் நடைபெற்ற பொதுக் குழுவில், வணிகா்கள் கோபாலகிருஷ்ணன், ரமேஷ்குமாா், சீனிவாசன், சாந்திலால் ஜெயின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக சேலம் நகர அனைத்து வணிகா்கள் சங்க பொதுச்செயலாளா் ஜெயசீலன் கலந்து கொண்டாா்.
இக் கூட்டத்தில் போதையில்லா தமிழகம் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டில், அரசுக்கு உறுதுணையாக இருப்போம், காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு காற்று மாசுப் படாத பூமியைக் கட்டமைப்போம் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மளிகைக் கடை உரிமையாளா்கள், வணிகா்கள் திரளான அளவில் கலந்து கொண்டனா்.