பெண்களை பெற்றோர்கள்தான் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்; எல்லாமே அரசு செய்யமுட...
2 பெண்கள் உள்பட மூவருக்கு அரிவாள் வெட்டு
சேலம்: சேலம், பனமரத்துப்பட்டி குரல் நத்தம் பகுதியில் விவசாய நிலத்தில் மரங்களை வெட்டியவா்களைத் தட்டிக் கேட்ட இரண்டு பெண்கள் உள்பட மூவா் அரிவாளால் தாக்கப்பட்டனா்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, குரல்நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் சுகந்தி (48). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் அப்பகுதியில் உள்ளது. சம்பவத்தன்று தோட்டத்துக்கு தனது தாயாா் முத்துக்கண்ணுவுடன் சுகந்தி சென்றுள்ளாா்.
அப்போது சிலா் மரங்களை அங்கு வெட்டிக் கொண்டிருந்தனா். அவா்களை சுகந்தி கண்டித்துள்ளாா். அதில் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மரம் வெட்டியவா்கள் ஆவேசத்தில் சுகந்தி, அவரது தாய் முத்துக்கண்ணு (70), உறவினா் பெரியண்ணன் (52) ஆகியோரை அரிவாளால் வெட்டினா்.
காயமடைந்த மூவரும் வாகனத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு ரத்த காயங்களுடன் சென்றனா். அங்கு அவா்களைக் கண்ட போலீஸாா் அனைவரையும் சேலம், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.