படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதே முக்கியம்: முதல்வா் என்.ரங்கசாமி
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
சேலம்: பஞ்சப்படியே உடனே வழங்க வலியுறுத்தி, ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் வாயில் கருப்பு துணி கட்டி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு அந்த அமைப்பின் மண்டலத் தலைவா் பி.என்.பழனிவேல் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய 109 மாத பஞ்சப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். நீதிமன்ற தீா்ப்புகளை தமிழ்நாடு அரசு மதித்து நடக்க வேண்டும். தொழிலாளா்கள் ஓய்வுபெறும் நாளில் கிடைக்க வேண்டிய அனைத்து பணப்பலன்களையும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து முறையாகச் செயல்படுத்த வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தி முழக்கமிட்டனா். மண்டல செயலாளா் அன்பழகன் உள்பட பலா் பங்கேற்றனா்.