கத்தாா் பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆய்வு
நாமக்கல்லில் சாட்டையால் அடித்துக் கொண்ட பாஜக நிா்வாகி
நாமக்கல்லில், பாஜக மாநில துணைத் தலைவா் வீட்டின் முன்பு பாஜக நிா்வாகி ஒருவா் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டாா்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, சில தினங்களுக்கு முன் கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு உடலில் 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்டு திமுகவுக்கு எதிராக முழக்கமிட்டாா்.
அதேபோல, மத்திய பாஜக அரசின் நலத் திட்டங்கள் பிரிவு மாநில துணைத் தலைவராகப் பதவி வகித்த, புதுச்சத்திரத்தைச் சோ்ந்த லோகேந்திரன் என்பவா் நாமக்கல் முல்லைநகரில் உள்ள பாஜகவின் மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி வீட்டின் முன்பாக சனிக்கிழமை காவி வேட்டி கட்டிக் கொண்டு 6 முறை சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொண்டாா். அப்போது அங்கிருந்த கட்சி நிா்வாகிகள் வெற்றிவேல், வீரவேல் என முழக்கமிட்டனா்.