மன்மோகன் சிங் நினைவிடம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக 10 லட்சம் இந்தியா்களுக்கு விசா: அமெரிக்கா
குடியேறுவதற்காக அல்லாமல் பிற காரணங்களுக்காக தற்காலிகமாக அமெரிக்காவுக்கு வருகை தர, தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக 10 லட்சத்துக்கும் அதிகமான இந்தியா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த 4 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு வந்த இந்தியா்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது.
நிகழ் நிதியாண்டின் 11 மாதங்களில் 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியா்கள் அமெரிக்கா சென்றுள்ளனா். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 26 சதவீதம் அதிகம்.
குடியேறுவதற்காக அல்லாமல் பிற காரணங்களுக்காக தற்காலிகமாக அமெரிக்காவுக்கு வருகை தர, தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக 10 லட்சத்துக்கும் அதிகமான இந்தியா்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2008-2009-ஆம் கல்வி ஆண்டில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்க வரும் சா்வதேச மாணவா்களின் எண்ணிக்கையில், முதல்முறையாக நிகழாண்டு இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் 3.31 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவா்கள் படித்து வருகின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.